ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
பவானிசாகர் அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் இந்த குடோனின் கீழ் தளத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் குடோனில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 45 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை வாங்க வந்த கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகரைச் சேர்ந்த அன்பழகன், கோவை மாவட்டம் பூலுவ பாளையத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து கோவை மற்றும் ஈரோடு பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'