அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை ஆரம்பித்தோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பரப்புரையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்நிலையில், சென்னை திநகர் இல்லத்தில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னார் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என்று தெரியாது. ஆனால் மீட்டெடுப்போம். அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். முதலமைச்சர் பதவியிலும், அமைச்சர் பதவியிலும் இருந்துகொண்டு எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் தரமற்ற முறையில் பேசி வருகின்றனர். பேசுபவர்கள் பேசட்டும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். ஒருவாரமாக ஏன் பதற்றத்தில் இருக்கிறார்கள். என்ன காரணம்? நாங்கள் பேசாமல் வந்தோம். நாங்கள் பேசாமல் இருக்கிறோம். நான் யாரையாவது கண்ணியக்குறைவா பேசியிருக்கேனா? கட்சி ஆரம்பித்தது அதிமுக மீட்டெடுக்க என்று சொல்கிறேன். அது தப்பா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?