5 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்திற்கான 6 கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது
மும்பையை சேர்ந்த ஒரு தம்பதியின் 5 மாத குழந்தையான டீரா காமத் அரிய வகை மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதை மரபணு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறினர். ஆனால் இதற்காக ஜோல்கென்ஸ்மா என்ற மருந்து அவசியம் தேவைப்படும் என்றும் அமெரிக்காவில் கிடைக்கும் இம்மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருந்தின் விலை மலைக்க வைத்தாலும் பிள்ளையை காப்பாற்ற வேண்டிய வேகத்தில் இருந்த அத்தம்பதி சமூக தளங்கள் உள்ளிட்ட வழிகளில் மருந்திற்கான பணத்தை அரும்பாடுபட்டு திரட்டியுள்ளது.
ஆனால் அம்மருந்திற்கு 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டவேண்டியிருந்தால் அத்தம்பதி மனமுடைந்து போனது. இந்நிலையில் மருந்திற்கு வரித் தள்ளுபடி கேட்டு பிரதமர் மோடிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபத்னவிஸ் மூலமாக அத்தம்பதி கடிதம் எழுதியது. இதையடுத்து மருந்துக்கான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை தள்ளுபடி செய்வதாக அரசு தெரிவித்தது. இதையடுத்து பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் அத்தம்பதி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளது
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி