'தி க்ரே மேன்' ஹாலிவுட் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனுஷ் அமெரிக்கா சென்றார்.
'கர்ணன்' படத்தை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கலந்துகொண்டார். அந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார்.
Had an amazing time working with this amazing team! Looking forward to the next schedule! ☺️@dhanushkraja @SathyaJyothi_ @karthicknaren_M @Lyricist_Vivek @gvprakash #D43 ♥️
— malavika mohanan (@MalavikaM_) February 7, 2021Advertisement
அதனைத்தொடர்ந்து தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. இதனிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் சம்பந்தப்பட்ட தகவல்களும் வந்தன.
இந்நிலையில் நேற்று காலை போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நேற்றிரவு 'தி கிரே மேன்' படத்தில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'