இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சென்னை ஆடுகளத்தை ‘நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸ்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் ஆடுகளம் குறித்து ஆர்ச்சர் இப்படி தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஐந்தாம் நாளன்று சென்னை ஆடுகளம் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸாக இருந்தது. அந்த நாள் ஆட்டம் ஆரம்பித்தபோது நாங்கள் வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில் அதை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் இந்திய வீரர்கள் திறன்படைத்தவர்கள், தவிர சொந்த மண்ணில் விளையாடுவதால் அதை செய்வது கொஞ்சம் கடினம் என தோன்றியது. அதனால் அவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் மதிய நேர டிரிங்க்ஸ் பிரேக்கிற்கு பிறகு எங்களது வெற்றி உறுதியானது.
இந்தியா மாதிரியான அசாத்திய திறன் படைத்த அணியை வென்ற அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'