பிப்ரவரி 15க்குள் வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது.
'தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடிந்துள்ளதாக கூறப்பட்டது. வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கும் நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள போனி கபூர் வலிமை திரைப்படம் குறித்து பேசினார். அதில், ''அஜித் குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. பிப்ரவரி 15க்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும். ஒரு ஸ்டண்ட் காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டும். பிந்தைய தயாரிப்பு ( Post production) விரைவில் தொடங்கும். வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட உள்ளது.'' என தெரிவித்தார். மே1ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Source:forbes
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!