இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தால் விராட் கோலி 250 ரன்கள் அடிப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களும் விராட் கோலி அடித்தார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ஆசிஷ் நெஹ்ரா "நான் இங்கு ஒன்று இரண்டு சதங்களை பற்றி பேசவில்லை. இப்போது அடுத்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தால் கோலி 250 ரன்கள் நிச்சயம் அடிப்பார். அதுதான் கோலயின் சிறப்பு. நேற்றையப் போட்டியில் அஸ்வின் அவுட்டான பின்பும் தாறுமாறான ஷாட்டுகளை அவர் விளையாடவில்லை. நிதானமாகவே ரன்களை சேர்த்தார்" என்றார்.
மேலும் பேசிய அவர் "கோலியின் நேற்றைய இன்னிங்ஸ் பார்த்தபோது அவரின் நம்பிக்கை வெளிப்பட்டது. அவர் அவுட்டானது மிகவும் மோசமான பந்தால்தான், அந்தப் பந்து மிகவும் தாழ்வாக வந்தது. விராட் கோலி ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேன். அவரின் அணுகுமுறை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும். அவர் அதிகமாக பந்தை தடுத்து ஆடி பார்த்ததில்லை. ஆனால் நேற்றையப் போட்டியில் பார்த்தேன்" என்றார் ஆசிஷ் நெஹ்ரா.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி