[X] Close >

தேனி: திருமணத்தை மீறிய உறவு... மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Theni-A-relationship-that-violates-marriage-What-a-pity-for-the-husband-who-rebuked-his-wife

தேனியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை, கணவன் கண்டித்ததால் கணவன் கொலை செய்யப்பட்டார்.


Advertisement

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (44). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன், அதே பகுதியில் உள்ள தனது மாட்டுக் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

image


Advertisement


அப்போது அங்கு வந்த மலைச்சாமி, அங்கிருந்த அம்மிக்கல்லை தூக்கி ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டதோடு அரிவாளால் வெட்டியும் உள்ளார். இதில் ராஜேஷ் கண்ணன் அலறி அடித்து சத்தம் போட்டதோடு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஷ் கண்ணனின் தம்பி கதிரவன், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடம் சென்ற போலீசார், ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், மலைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

image


Advertisement


ராஜேஸ்கண்ணன் மனைவி மணிமேகலைக்கும், மலைச்சாமிக்கும் கடந்த 4 வருடங்களாக நிருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் கண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ராஜேஷ் கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ் கண்ணாவை, மலைச்சாமி கொலை செய்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close