இந்தியாவில் இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட, மக்களிடையே தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இதற்கான காரணம் என்ன?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்குவதற்கு முன்பும், ஜனவரி 16ஆம் தேதிக்கு பிறகும் மக்கள் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அதன்பலனாக இந்தியா உலக அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அதாவது 24 நாட்களில் 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 லட்சத்தை தாண்ட அமெரிக்காவில் 26 நாட்களும், பிரிட்டனில் 46 நாட்களும் ஆனது. ஜனவரி 16ஆம் தேதி மருத்துவப் பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2ஆம் தேதி முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.
இதுவரை 54 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களுக்கும், 6 லட்சத்துக்கும் அதிகமான முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்துவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல மக்களிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்து வருவதாக தெரிகிறது. இதற்கு கொரோனா வைரஸ் பரவல் தானாக குறைந்ததே காரணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பது யூகிக்க முடியாத அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?