ஆஸ்திரேலிய ஓபன் 2021 ஆம் ஆண்டிற்கான டென்னிஸ் தொடர் பிப்ரவரி 8 முதல் 21 வரை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பார்க்கில் நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லேம் தொடர்களில் ஒன்றான இந்த தொடரில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நோவாக் ஜோக்கொவிச் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ளார். இந்த தொடரில் சர்வதேச ஒற்றையர் ஆண்கள் டென்னிஸ் பிரிவில் 11 வது இடத்தில் உள்ள கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ் விளையாடி வருகிறார்.
முதல் சுற்று போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை 3 - 6, 6 - 3, 6 - 2, 4 - 6, 6 - 4 என்ற வென்றுள்ளார் டெனிஸ் ஷாபோலோவ். இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது ‘டாய்லெட் பிரேக்’ மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்துள்ளார் அவர்.
“நான் ஏன் போகக் கூடாது? அப்படி மீறி சென்றால் இந்த தொடரில் விளையாட எனக்கு அனுமதி மறுக்கப்படுமா? எனக்கு அவசரம். இதுமாதிரியான விதிமுறைகள் எல்லாம் அர்த்தமற்ற செயல். என்னுடைய பிளேடார் மிகவும் சிறியது. ஒவ்வொரு செட்டின் இடைவேளையின் போதும் நான் போயாக வேண்டும். அப்படி இல்லாமல் டென்னிஸ் கோர்ட்டில் நீண்ட நேரம் விளையாடுவது எல்லாம் சாத்தியமற்றது.
போட்டிகளுக்கு முன்னதாக அதிகளவிலான நீர் இணைத்த பொருட்களை எடுத்துக் கொள்வது எனது வழக்கம். மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை கோர்ட்டில் குறிப்பிட்ட சில டாய்லெட் பிரேக்குகளை மட்டுமே எடுத்துக் கொண்டு விளையாட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்டத்தின் நடுவரிடமும் அவர் முறையிட்டிருந்தார். இந்த தொடரில் ஐந்து செட் கொண்ட ஆட்டத்தின் போது வீரர்கள் இரண்டு முறை மட்டுமே வாஷ்ரூம் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அது கூட செட்களுக்கு இடையில் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!