இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 13 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு பின்பு விராட் கோலி பேட்டியளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.
அப்போது பேசிய அவர் "வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வினும் தொடர்ச்சியாக நன்குப் பந்துவீசினார்கள். வாஷிங்டன் சுந்தரும் ஷபாஸ் நதீமும் குறைந்த ரன்களைக் கொடுக்குமளவு பந்து வீசியிருக்கலாம். இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுத்திருக்கலாம். அப்படிப் பந்து வீசியிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். எதிரணி 80-90 ரன்கள் குறைவாக எடுத்திருப்பார்கள். பேட்டிங்கிலும் முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம்" என்றார்.
மேலும் "அப்படி நடந்திருந்தால் போட்டி அப்போது சமநிலையில் இருந்திருக்கும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்றுவிட்டது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. பந்தின் தரம் சரியாக இல்லை. 60 ஓவர்களில் பந்து அதன் தன்மையை இழந்து விட்டது" என்றார் கோலி.
ரஹானேவின் மோசமான பார்ம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி "எப்படி புஜாரா நம்பர் 3 பேட்ஸ்மேனாக இந்திய டெஸ்ட் அணிக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதேபோல 5 ஆம் இடத்துக்கு ரஹானேவும் முக்கியமானவர். அவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. இதனை பல முறை அவர் நிரூபித்திருக்கிறார். பல காலமாக அணியில் இருக்கிறார்" என்றார் கோலி.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?