இந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்று சாதம். அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்களின் பிரதான உணவே அரிசி சாதம்தான். தினசரி சாதம் இல்லாத வீடுகள் இருக்காது. ஆனால் சமீபகாலமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதால்தான் உடல் எடை கூடுகிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டே தவிர்க்க முடியாததால் சிலர் சாப்பிடுகின்றனர். காரணம், வெள்ளை அரிசி சாதம் உடல் எடையை கூட்டும்; சிவப்பரிசி சாதம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்ற தவறான கருத்து பரவிவருவதுதான். இதனால் உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டும் பலரும் வெள்ளை அரிசி சாதம் பற்றி வெளிவரும் அனைத்து வதந்திகளையும் நம்பி அதிக ஊட்டச்சத்திற்காக சிவப்பரிசி சாதத்திற்கு மாறிவருகின்றனர். ஆனால், அரிசி சாதம் சாப்பிடுவது குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பாத்ரா.
வெள்ளை அரிசி சாதம் உண்மையில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா?
வெள்ளை அரிசி சாதமா அல்லது சிவப்பரிசி சாதமா என்ற விவாதத்தில் பலரும் சிவப்பரிசி பக்கம் சாய்ந்துவிடுகின்றனர். சிவப்பரிசியைப் பொறுத்தவரை அந்த அரிசி தவிடு நீக்கப்படாதது. மேலும். அது முழு தானியமாகவும் கருதப்படுகிறது. இதனால் சிவப்பரிசி நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்ததாகக் காணப்படுகிறது. மறுபுறம், வெள்ளை அரிசி தவிடு இல்லாதது மற்றும் சிவப்பரிசியைவிட குறைவான சத்துடையது. மேலும் இந்த அரிசியில் ஆன்டி ஆக்ஸிடண்டுகளும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது எனவும், வெள்ளை அரிசியில் வெறும் கலோரிகள் மட்டும்தான் நிறைந்திருப்பதாகவும் கருதுகின்றனர்.
சிவப்பரிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இரண்டு அரிசியின் நிறை குறைகளை தெரிந்துகொள்வது அவசியம். சிவப்பரிசியின் வெளிப்புற அடுக்கான தவிட்டில் பைடிக் அமிலம் உள்ளது. இது அரிசியை ஜீரணிக்கும் செயலை கடினமாக்குகிறது. மேலும் இந்த அமிலம் குடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே, அடிக்கடி செரிமானப் பிரச்னை மற்றும் குடல் அலர்ஜி உள்ளவர்கள் சிவப்பரிசியை தவிர்ப்பதே சிறந்தது.
அதேசமயம் வெள்ளை அரிசி எளிதாக செரிமானம் அடையக்கூடியது. இதில் இயற்கையாகவே துத்தநாகம் நிறைந்திருக்கிறது. அரிசி சாதத்தை வெறுமனே சாப்பிடாமல் அதிக காய்கறிகள் மற்றும் பருப்புடன் சேர்த்து சாப்பிடும்போது வெறும் கலோரிகள் மட்டும் உடலில் சேருவது போன்ற உணர்வு ஏற்படாமல் அதிக ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்த நிறைவு கிடைக்கும். குறிப்பாக நார்ச்சத்துமிக்க காய்கறிகளுடன் அரிசி சாதத்தை சேர்த்துக்கொள்வது சிறந்தது. அதேசமயம் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு உணவுகளை தவிர்த்துவிடக்கூடாது என்கிறார் நிபுணர்.
குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும்கூட வெள்ளை அரிசி சாதத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சரியான உணவு சேர்த்து சாப்பிடவேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேசமயம் க்ளைசெமிக் குறியீடு குறித்து கவலைப்பட வேண்டாம். அரிசி சாதம் எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய நிபுணரை அணுகி சரியான உணவுமுறையை கேட்டறிந்து அதை பின்பற்றுவதே சிறந்தது என்கிறார் பாத்ரா.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை