ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் மெல்போர்ன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடி உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு பாண்டிங் சொந்தக்காரர். இந்நிலையில் அவரது மெல்போர்ன் வீட்டில் கடந்த 5-ஆம் தேதியன்று நுழைந்த திருடர்கள், ட்ரைவ் வேவில் நிறுத்தப்பட்டிருந்த காரை தட்டி தூக்கி சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் திருடப்பட்ட பாண்டிங்கின் காரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அது தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. போலீசார் நடவடிக்கை எடுத்தவுடன் அந்த காரை மெல்போர்னின் கேம்பர்வெல் பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர் திருடர்கள். நகரப்பகுதிக்குள் அந்த காரை தாறுமாறாக திருடர்கள் ஓட்டியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த காரில் இருந்த இருவர் தப்பிச் சென்றதாகவும் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தால் வேறு எந்தவித பாதிப்பும் பாண்டிங் தரப்புக்கு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை