சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் அவுட்டானதால் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.
இதனையடுத்து இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. இதில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அரை சதமடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்ஸின் 'இன் ஸ்விங்' பந்துவீச்சுக்கு போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார். இப்போது களத்தில் விராட் கோலியும், ரிஷப் பன்ட் இருக்கையில், இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து போராடி வருகிறது
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?