கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி இயக்கியுள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்னீக் பீக்’ வெளியாகி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன. ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகிறது.
இரு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்த நிலையில், இன்று இப்படத்தின் ஸ்னேக் பீக் வெளியாகி இருக்கிறது. அதில், திருமணமான விஜய் சேதுபதி வேறு பெண்ணுடன் போனில் பேசுவதற்காக மாடியில் இருக்கும் தனது மாமனாரை கீழே அனுப்பிவிட்டு காதலியுடன் பேசத்தொடங்குவதோடு ஸ்னீக் பீக் முடிவடைகிறது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அமலாபால், விஜய் சேதுபதி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!