[X] Close

''வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யலாம்'' - சோதனையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

Subscribe
WhatsApp-Testing-Feature-to-Mute-Videos-Before-Sharing

வீடியோவை மற்றவருக்கு அனுப்பும் போது அதன் ஆடியோவை மியூட் செய்து அனுப்பும் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப்.


Advertisement

அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சேட் (chat) செயலியாக உள்ளது வாட்ஸ் அப். அவ்வப்போது அப்டேட்கள் கொடுக்கப்பட்டு பயனர்களுக்கு வசதியாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வீடியோ அனுப்பும் முறையில் புதிய அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது வீடியோவை மற்றவருக்கு அனுப்பும் போது அதன் ஆடியோ அளவை மியூட் செய்து அனுப்பும் புதிய அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. வீடியோ அனுப்பும் முன்பே அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆடியோவை மியூட் செய்து அனுப்ப முடியும்.

image


Advertisement

தற்போது பீட்டா வெர்சன்களில் சோதனை முறையில் இந்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப். அதுமட்டுமின்றி எமோஜி வைப்பது, டெக்ஸ்ட் வைப்பது, எடிட் செய்யும் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

image

தற்போது 2.21.3.13வெர்ஷன் வகை பீட்டாவில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் குறைபாடுகள் ஏதுமின்றி இருந்தால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close