செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், ட்ரெய்லர் வெளியானபோது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது.
ஆனால் திரைப்படம் வெளியாகாமல் நாட்கள் ஓடின. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது வேற விளையாட்டு எனத் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் செல்வராகவன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Thank you all for your patience ?#நெஞ்சம்மறப்பதில்லை from March 5 - in THEATRES ?️
*இது வேற விளையாட்டு*@iam_SJSuryah @thisisysr @ReginaCassandra @Madan2791 @Nanditasweta @EscapeArtists_ @Rockfortent @kbsriram16 @Karthikravivarm @APVMaran @RIAZthebosshttps://t.co/D3VbokXe04— selvaraghavan (@selvaraghavan) February 8, 2021Advertisement
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி