சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை பெருநகரில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


Advertisement

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வெளியிட்ட அறிவிப்பில், மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் பகுதியில் கூடுதல் டிஜிபி ராஜேஸ்தாஸ், அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்ஹா, வடசென்னை பூக்கடை பகுதியில் கடலோர காவல் குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு, வடபழனி பகுதியில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் ஹவுஸ், எழும்பூர், தேனாம்பேட்டை, வேளச்சேரி, கோயம்பேடு உள்ளிட்ட சென்னையின் காவல் மண்டலங்களில், 10 ஐஜிக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 11 பெண் எஸ்.பி.க்கள் உட்பட 13 காவல்துறை கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக காவல்துறை வரலாற்றில், சென்னை நகரில், 4 ஏடிஜிபிக்கள் தலைமையில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு காவல் பணிக்கு அமர்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement