சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மற்றும் அவரது மகன் நடிக்கும் படத்தில் நடிகர் விஜயகுமாரும் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவருக்கு கதை சொல்வது அத்தனை எளிதல்ல என அந்தப்படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியுள்ளார்.
சூர்யா தயாரிப்பில் அருண்விஜய், அவரது மகன் ஆர்ணவ் விஜய் இணைந்து நடிக்கும் படத்தில் தற்போது அருண்விஜயின் தந்தையான நடிகர் விஜய்குமாரும் இணைந்துள்ளார்.
The Three Generation starrer!!!?
Arnav is blessed to share screen space with my dad in his debut.
It is being an incredible and memorable experience working together! Thanks to @Suriya_offl @2D_ENTPVTLTD for making it happen..❤ pic.twitter.com/h0zmSwqUSg— ArunVijay (@arunvijayno1) February 6, 2021Advertisement
இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறும் போது, “ அண்மையில் அருண் விஜய், ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பகிர்ந்திருந்தேன். அந்த வரிசையில் தற்போது, தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்த மூத்த நடிகர் விஜய குமாரும் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.
அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு, அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அருண் விஜய் போன்று விஜய் குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை.
அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இந்தப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது. படம் மிக அழகாக உருவாகி வருகிறது
சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films S.R.ரமேஷ் பாபு ஆகியோரும் இணைதயாரிப்பில் ஈடுபடுகின்றனர். படத்தை சரவ் சண்முகம் இயக்குகிறார். நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!