போதைப் பொருள் விவகாரம்: நடிகர் ரவிதேஜா அம்மா விளக்கம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ரவிதேஜாவுக்கு தொடர்பு இல்லை என்று அவரது அம்மா ராஜ்ய லட்சுமி கூறியுள்ளார்.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வரும் 22-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
இதுபற்றி ரவிதேஜா கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது அம்மா, ராஜ்ய லட்சுமி விளக்கமளித்துள்ளார். ‘ரவிதேஜாவுக்கும் போதை விவகாரத்துக்கும் தொடர்பில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பது எங்களுக்குத் தெரியும். தேவையில்லாமல் என் மகன் பெயரை இதில் சேர்த்துள்ளனர்’ என்றார். அவர்களது குடும்ப டாக்டர் கடியலா ராஜேந்திரா கூறும்போது, ‘சிகரெட் புகை வந்தாலே தூரம் சென்றுவிடுவார் ரவிதேஜா. அவருக்கும் போதைக்கும் சம்பந்தமில்லை என்பதை சொல்லும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது என்பதால் இதை தெரிவிக்கிறேன்’ என்றார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement