இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே கடந்த 1999-இல் தரமான சம்பவம் செய்த நாள் இன்று. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் ஜிம் லேகர் 1956-இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த போட்டி மான்செஸ்ட்டரில் நடைபெற்றது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை மற்றும் டெல்லியில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. அந்த சமயத்தில் கார்கில் போரும் நடந்து கொண்டிருந்தது. இந்த சூழலில்தான் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் டெல்லி போட்டியில் விளையாடி இருந்தது. பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 420 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
#OnThisDay in 1999, #TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler and second overall to scalp all the 10 wickets in a Test innings. ??
Watch that fantastic bowling display ?? pic.twitter.com/OvanaqP4nU — BCCI (@BCCI) February 7, 2021
ஷாகித் அப்ரிடியும், சயீத் அன்வரும் 101 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதற்கடுத்து பந்துவீச வந்து கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி 74 ரன்கள் கொடுத்து பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அதன் மூலம் இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'