கேட்சை நழுவ விட்ட ரோகித் ஷர்மா: வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் ரியாக்ஷன்!

கேட்சை நழுவ விட்ட ரோகித் ஷர்மா: வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் ரியாக்ஷன்!
கேட்சை நழுவ விட்ட ரோகித் ஷர்மா: வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் ரியாக்ஷன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்துள்ளது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி 4 கேட்ச்களை நழுவவிட்டுள்ளது. அதில் மூன்று கேட்ச் வாய்ப்புகள் கொஞ்சம் கடினமான வாய்ப்புகளாக இருந்தன. ஆனால் அதில் ரோகித் ஷர்மா தவறவிட்ட நான்காவது கேட்ச் வாய்ப்பு மிக சுலபமான ஒன்று.

175 ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை டாம் பெஸ் எதிர்கொண்டார். அவர் மிட் விக்கெட் திசையில் அந்த பந்தை ஆடியிருந்தார். பந்து அந்த திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் ஷர்மாவிடம் பறந்து சென்றது. இருப்பினும் அதை ரோகித் ஷர்மா தவறவிட்டார். அதை கேலரியில் இருந்து பார்த்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ‘அய்யோ பாவம்’ என்பதுபோல ரியாக்ஷன் கொடுத்திருந்தார். 

“இது மாதிரியான சுலப கேட்ச்களை நழுவ விடுவது கஷ்டமாக இருக்கிறது”, கேட்சை டிராப் செய்ததும் ரோகித் சன் கிளாஸை துடைத்தார்” எனவும் ட்வீட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com