இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்துள்ளது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி 4 கேட்ச்களை நழுவவிட்டுள்ளது. அதில் மூன்று கேட்ச் வாய்ப்புகள் கொஞ்சம் கடினமான வாய்ப்புகளாக இருந்தன. ஆனால் அதில் ரோகித் ஷர்மா தவறவிட்ட நான்காவது கேட்ச் வாய்ப்பு மிக சுலபமான ஒன்று.
175 ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை டாம் பெஸ் எதிர்கொண்டார். அவர் மிட் விக்கெட் திசையில் அந்த பந்தை ஆடியிருந்தார். பந்து அந்த திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் ஷர்மாவிடம் பறந்து சென்றது. இருப்பினும் அதை ரோகித் ஷர்மா தவறவிட்டார். அதை கேலரியில் இருந்து பார்த்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ‘அய்யோ பாவம்’ என்பதுபோல ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.
Rohit Sharma dropped a simple catch ?
See the reaction of ben stokes and Kohli ? pic.twitter.com/YqBVeLpzx4— rizwan (@rizwan68301915) February 6, 2021Advertisement
“இது மாதிரியான சுலப கேட்ச்களை நழுவ விடுவது கஷ்டமாக இருக்கிறது”, கேட்சை டிராப் செய்ததும் ரோகித் சன் கிளாஸை துடைத்தார்” எனவும் ட்வீட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை