சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்காமல் திணறினாலும் கீப்பர் ரிஷப் பண்ட் கலகலப்பாகவே பேசிக்கொண்டு இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் விரைவாக 2 விக்கெட்டை இழந்தாலும் ஜோ ரூட் மற்றும் டோம் சிப்லே ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இந்த இருவர் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் ரிஷப் பண்ட் மட்டும் கலகலப்பாக ஸ்டம்புக்கு பின்னே நின்று பேசிக்கு கொண்டு இருந்தார்.
"Mera naam hai Washington, Mereko jana hai DC"
- Poet Rishabh Pant??#INDvENG #Pant #ViratKohli #Kohli #RishabhPant #Root #Rahane pic.twitter.com/QBmuSMUNp3 — Abhi Khade (@khadeabhishek1) February 5, 2021
ஆட்டத்தின் 70 ஆவது ஓவரின்போது டோம் சிப்லே பேட்டிங் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்தார். அப்போது ரிஷப் பன்ட் "என்னுடைய பெயர் வாஷிங்டன் ஆனால் நான் டிசிக்கு போக வேண்டும்" என கத்தினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாக வைரலானது. அமெரிக்காவின் தலைநகரை வாஷிங்டன் டிசி என கூறுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக வீரரான வாஷிங்டனின் தந்தையான சுந்தர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த வாஷிங்டன் என்ற நண்பரின் பெயரினை தன் மகனுக்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?