திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், ஏர்கலப்பையுடன் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஏர் கலப்பையுடன் அண்ணாமலை நகரில் இருந்து பாஸ்போர்ட் சேவா மையம் 4 சந்திப்பு சாலை வரை பேரணி நடத்தினர். பின்னர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்
முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். நேற்று தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த பயிர் கடன் தள்ளுபடி என்பது செயல்வடிவம் பெற வேண்டும் எனவும் 110 விதியின் கீழ் அறிவிப்பாக இருக்க கூடாது எனவும் இந்த அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!