[X] Close >

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: மோடியின் அண்ணன் மகளுக்கு பாஜகவில் சீட் மறுப்பு

Gujarat-local-body-polls--Modi-s-nephew-denied-seat-in-election

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை.


Advertisement

குஜராத்தில், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் 576 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் அகமதாபாத் மாநகராட்சியின் பொடக்தேவ் வார்டில் போட்டியிட பிரதமர் மோடியின் அண்ணன் மகள் சோனால் மோடி சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கவில்லை.

image


Advertisement

குஜராத் நியாய விலை கடைகள் சங்க தலைவராகவுள்ள சோனால், தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்றாலும் பாரதிய ஜனதாவிற்காக துடிப்புடன் செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில், பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது என கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close