மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் ஒன்று கூடி தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகம் முழுவதுமுள்ள மக்களின் எதிர்ப்பை பெற்றது. அதையடுத்தது பாடகி ரிஹான்னா விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்திருந்தார். தொடர்ந்து கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா மாதிரியானவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதற்கு சில இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அமேரிக்க நாட்டின் தேசிய கால்பந்தாட்ட லீக் போட்டியான NFL தொடரின் நட்சத்திர வீரரான ஜூஜூ ஸ்மித், போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதி உதவியும் கொடுத்து உதவியுள்ளனர்.
“உங்களுடன் இதை பகிர்வதில் மகிழ்ச்சி. போராடி வரும் இந்திய விவசாயிகளின் மருத்துவ தேவைகளுக்காக 10000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளேன். இந்நேரத்தில் அது உதவியாக இருக்கும் என கருதுகிறேன். இதன் மூலம் விலைமதிப்பில்லாத விவசாயிகளின் உயிரை காக்கலாம்” என ட்வீட் செய்துள்ளார் அவர்.
Happy to share that I’ve donated $10,000 to provide medical assistance to the farmers in need in India to help save lives during these times. I hope we can prevent any additional life from being lost. ?? #FarmersProtest https://t.co/0WoEw0l3ij — JuJu Smith-Schuster (@TeamJuJu) February 3, 2021
மற்றொரு கால்பந்தாட்ட பிரபலம் Kyle குஸ்மோவும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ரிஹான்னா ஷேர் செய்த அதே ட்வீட்டை தனது ட்வீட்டில் மேற்கோள் காட்டியிருந்தார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!