அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என் விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். அர்ஜூன் டெண்டுல்கரை பொருத்தவரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக நெட் பவுலராக சில வருடங்கள் இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு அவர் அணியுடன் சென்றிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். ஆனால், பெரிய அளவில் அர்ஜூன் சோபிக்கவில்லை. சையத் முஷ்டக் அலி கோப்பையில் 7 ஓவர்கள் வீசி 67 ரன்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி