சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லே களமிறங்கினர்.இந்திய வேகப்பந்துவீச்சை திறம்பட விளையாடி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தனர்.
இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தும் விளையாடி வந்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரோரி பர்ன்ஸ். இதனையடுத்து லாரண்ஸ் களமிறங்கினார். அப்போது பும்ரா பந்துவீச 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்ட ரூட் மற்றும் சிப்லே ஜோடி மரண மாஸ் காட்டினர். அதிலும் ஜோ ரூட் 164 பந்துகளை சந்தித்து 100 ரன்களை அடித்து அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டி ஜோ ரூட்டின் 100 ஆவது டெஸ்ட். இந்தப் போட்டியில் 100 ஆவது சதத்தையும் சிறப்பாக பதிவு செய்தார். இந்த இருவர் கூட்டணி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மறுமுனையில் டோம் சிப்லே நிதானமாகவும் கிளாஸாகவும் விளையாடி வந்தார் அவர் 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாளின் கடைசி ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?