கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி இயக்கியுள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன. ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.
இரு நாட்களுக்கு முன்பு இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகியிருக்கிறது.
ட்ரைலர் ஆரம்பிக்கும்போதே காக்டெய்ல் காதல் கதை என்று ஆரம்பிக்கிறது. யங் கெளதம் மேனன், சற்றே மெலிந்து காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, ‘உனக்கு என்னை பிடிக்குமா? உன் பொண்டாட்டியை பிடிக்குமா? என்று மிரட்டல் கேள்வி கேட்கும் அதிதி பாலன், காதலில் உருகும் மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் என அத்தனை பேர் நடித்திருந்தாலும் அதிகம் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதியும், அமலா பாலும்தான். நான்கு விதமான காதல் கதைகளுமே வித்தியாச கதைக்களத்தை கொண்டது என்று ட்ரைலர் உணர்த்துகிறது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அமலாபால், விஜய் சேதுபதி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'