[X] Close >

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிக்கும் ‘ரைட்டர்’ படப்பிடிப்பு நிறைவு!

samuthirakani-Writer--shooting-wrapped

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன.


Advertisement

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம், அந்த ஆண்டு வசூலைக் குவித்ததோடு பாராட்டுக்களையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்தார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

image


Advertisement

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன. இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்புதான் சமீபத்தில் வெளியானது.

image

இதில், சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். ’ரைட்டர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தினை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறார். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close