[X] Close >

பருமனான சமையல் கலைஞராக அசோக் செல்வன்: வெளியானது தீனி படத்தின் ட்ரெய்லர்

Ashok-Selvan-as-Stew-Chef-Trailer-of-theeni-movie-released

அசோக் செல்வன், ரிது வர்மா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தீனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


Advertisement

'சூது கவ்வும்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். அதனைத்தொடர்ந்து பீட்சா 11, வில்லா, தெகிடி உள்ளிட்டப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீனி’. இந்தப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கியுள்ளார் மலையாளத்தில் ‘பிரேமம்’படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement

அசோக் செல்வன் சற்று எடை அதிகமுள்ள, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காமெடியும் ஆழமான காதலும்,சமையலும் அதனை ஒட்டிய காட்சிகளுடன் பின்னி பிணைந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close