வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அண்மையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும் வன்முறை முடிந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரியான்னா “ நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இவரது பதிவை தொடர்ந்து பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றி மாறனும் பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, “ தங்களது குரலுக்கு செவிசாய்க்கப்படாததன் வெளிப்பாடுதான் மக்களின் போராட்டம். ஆளும் அரசாங்கத்தின் அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டது. இது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். மாறாக கார்ப்ரேட்டின் நலனை சார்ந்து இருக்கக் கூடாது. விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் உரிமைக்காக போராடுவதும், போராட்டத்திற்கு துணை நிற்பதுமே ஜனநாயகம்.” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!