சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது.
அதன்படி, தற்போது ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610க்கும், பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்தை ரூ.30 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் எனவும், பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம் எனவும், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது.
மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின்கீழ் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி