வலிமை படக்குழுவில் சந்தித்த ரசிகரிடம் ‘பிப்ரவரி இறுதிக்குள் வலிமை அப்டேட்’ வருகிறது என்று அஜித் கொடுத்த அப்டேட்டால் ரசிகர் நெகிழ்ந்துபோய் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. 'ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறது.
விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் வெளியீடுகளும் அப்டேட்டுகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வலிமை படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகிறார்.
Last evening met #ThalaAjith sir at #Valimai️ set's and 10mins we enjoyed with him and when we asked him #ValimaiUpdate he told by February end will get All updates. Really humbled sir for giving us appointment. pic.twitter.com/1R9GKgJBS2 — Harishsayz (@sonusoodharish) February 4, 2021
இதனால், வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், ஹரிஷ் என்ற சினிமா மேனேஜர், வலிமை படக்குழுவை நேற்று சந்தித்துள்ளார். 10 நிமிடம் அஜித்துடன் உரையாடியவர் ’வலிமை அப்டேட் எப்போது?’ என்று கேட்டதற்கு ‘இம்மாத இறுதிக்குள்’ என்று அஜித் ஏமாற்றாமல் அப்டேட் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படமும் பதிவும் தற்போது வைரல் ஆகியுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி