அசாம் மாநிலம் கர்பி ஆங்கலாங் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பங்கேற்றிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதில் சுமார் 8000 பேர் பங்கேற்றுள்ளனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சரும் பிரியாணி சாப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
“எனக்கு உடல்நிலையில் கொஞ்சம் பாதிப்பு இருந்ததுபோல தெரிந்தது. வயிறு உபாதையாக இருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்டது. உணவு கெட்டுப்போனதுதான் இதற்கு காரணம் என தெரிகிறது. மயங்கி விழுந்த 145 பேரில் 28 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு வயிற்று போக்கும், வாந்தி மாதிரியான அறிகுறிகள் உள்ளன. அந்த பிரியாணி உணவை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்” என சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை!
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்