[X] Close >

பயோ எரிபொருளில் இயங்கும் முதல் ராக்கெட்... ஸ்டார்டஸ்ட் 1.0-ன் சிறப்பம்சங்கள்!

The-first-rocket-to-run-on-biofuel--What-is-Stardust-1-0

அமெரிக்காவில் உள்ள லோரிங் வர்த்தக மையத்தில் ஜனவரி 31-ம் தேதி 'ஸ்டார்டஸ்ட் 1.0' (Stardust 1.0) ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இது எரிபொருளால் இயக்கப்படும் முதல் வர்த்தக ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. பயோ எரிபொருள் என்பதால் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ராக்கெட் எரிபொருள்களுக்கு இது மாற்றாக இருக்கும் எனவும், சுற்றுச்சூழலுக்கு நச்சுத் தன்மையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்டார்டஸ்ட் 1.0' சிறப்பம்சங்கள் குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.


Advertisement

அது என்ன 'ஸ்டார்டஸ்ட் 1.0'?

அமெரிக்காவின் மைனேவை தளமாகக் கொண்ட 'புளூஷிஃப்ட்' என்ற விண்வெளி நிறுவனத்தால் இந்த ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. புளூஷிஃப்ட் என்பது Bio-derived எரிபொருள்களால் இயக்கப்படும் ராக்கெட்டுகளை உருவாக்கி வரும் நிறுவனமாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு இதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாச்சா டெரியால் என்பரால் உருவாக்கப்பட்டது.


Advertisement

மொத்தம் 20 அடி உயரமும், சுமார் 250 கிலோ எடையும் கொண்ட இந்த ராக்கெட், அதிகபட்சமாக 8 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. ராக்கெட்டின் முதல் ஏவுதலின்போது, 3 போலோடுகளை சுமந்திருந்தது. இந்த ராக்கெட்டுகள் 'க்யூப்சாட்ஸ்' எனப்படும் சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய ராக்கெட் எரிபொருளைப் பயன்படுத்துவதை விட ஒப்பீட்டளவில் மலிவானது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்குக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிறுவனங்களும் விண்வெளிக்கான அணுகலை எளிதாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்த நிறுவனம் 'நியூ ஷெப்பார்ட்' என்ற ராக்கெட் அமைப்பை சோதித்தது. இந்த ராக்கெட் அமைப்பு, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதோடு, பூமிக்கு 100 கி.மீ தூரத்திற்கு விண்வெளிக்கு விமானங்களையும், பேலோடுகளுக்கு தங்குமிடத்தையும் உருவாக்குகிறது.


Advertisement

பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய மற்றொரு நிறுவனமான விர்ஜின் கேலடிக், நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துடன் சட்ட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயோ எரிபொருள் என்றால் என்ன?

பயோ எரிபொருள் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அறிக்கை ஒன்றின்படி, இது உலகெங்கிலும் உள்ள பண்ணைகளிலிருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. பயோ எரிபொருள் என்பது அமெரிக்கா முழுவதும் உள்ள பண்ணையிலிருந்தும் பெறக்கூடிய பொருட்களின் கலவைதான் என்றும், அது நச்சுத்தன்மை அற்றது என்றும் புளூஷிப்ட் விண்வெளி தளத்தின் சிஇஒ சார்ச்சா டெரி தெரிவித்துள்ளார்.

image

"என் இரண்டு இளம் மகள்களும் இந்த பயோ எரிபொருளை சாப்பிட முடியும். மலச்சிக்கலைத் தவிர வேறு எந்தத் தீங்கும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை" என்று பயோ எரிபொருளில் நச்சுத்தன்மை இல்லை என்பதை மேற்கொளிட்டு காட்டியுள்ளார்.

ஆனால், பரவலாக பயோ எரிபொருள்கள் உயிர் ஆற்றலிலிருந்து பெறப்பட்டு, நேரடியாக திரவ எரிபொருளாக மாற்றப்படுகின்றன. அதை போக்குவரத்து எரிபொருளாகவும் பயன்படுத்தப்படலாம். அமெரிக்க அரசின் எரிசக்தி திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அலுவலகத்தின் கூற்றின்படி, இன்று பயன்பாட்டில் உள்ள இரண்டு பொதுவான எரிபொருள்கள், எத்தனால் மற்றும் பயோடீசல் தான். அவை இரண்டும் முதல் தலைமுறை பயோ எரிபொருள் தொழில்நுட்பத்தைக் குறிக்கின்றன.

உதாரணமாக, எத்தனால் புதுப்பிக்கத்தக்கது மற்றும் பல்வேறு வகையான தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மறுபுறம் பயோடீசல் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள், விலங்குகளின் கொழுப்புகள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் கிரீஸ் ஆகியவற்றுடன் ஆல்கஹால் இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Indian Express

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close