விஜய் நடிக்கவுள்ள 65-வது படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து ‘கோலமாவு கோகிலா’ ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கதை விவாதப்பணி சென்னையில் உள்ள பிரபல விடுதியில் நடைபெற்று வருகிறது.
அதேபோல் படத்தின் நாயகிக்கான தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்ததால் இயக்குனர் அவரை தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும் ராஷ்மிகா மந்தனாவிற்கு கால்ஷீட் பிரச்னை இருப்பதால் பூஜா ஹெக்டேவை நாயகியாக தேர்வு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'