விஜய் ஹசாரே கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பின்பு ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணிக்காக விளையாடினார் நடராஜன். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து பார்மட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இந்தத் தொடரிலிருந்து அவருக்கு ஓய்வளித்தது பிசிசிஐ. இதனையடுத்து விஜய் ஹசாரே கோப்பையில் தமிழகம் சார்பில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டிருந்தார் நடராஜன்.
இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட பிசிசிஐ நடராஜனுக்கு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டி இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் பரோடாவை வீழ்த்திய சையத் முஷ்டக் அலி டி20 கோப்பையை வென்றது தமிழக அணி.
தமிழக அணி விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), இந்திரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக் கான், ஜெகதீசன், சூர்யபிரகாஷ், கெளசிக் காந்தி, ஜே. கெளசிக், எம். அஸ்வின், சாய் கிஷோர், எம். சித்தார்த், சோனு யாதவ், கே. விக்னேஷ், டி. நடராஜன், அஸ்வின் கிறைஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், பெரியசாமி, எம். முகமது.
Loading More post
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!