[X] Close >

''சைரன் வேண்டாம்; போலீஸ்னு பயமா இருக்கு” -ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த மாஃபியா

Ambulance-Driver-are-ordered-by-Mafia-Group-to-stop-the-using-of-Sirens-during-Driving-Ambulance-in-Italy

இத்தாலியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சைரனை பயன்படுத்தக் கூடாது என மிரட்டல் தொனியில் உத்தரவிட்டுள்ளது அங்குள்ள கடத்தல் கும்பல். ஆம்புலன்ஸுக்கும், போலீசாருக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி விடுவதாக அவர்கள் விளக்கமும் அளித்துள்ளனர்.


Advertisement

இத்தாலியில் மாஃபியா கும்பல் போதைக் கடத்தலை செய்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள நேப்பிள்ஸ் பகுதியில் ஆம்புலன்ஸை இயக்கும் போது சைரனை பயன்படுத்த வேண்டாம் என அதை இயக்கம் ஓட்டுனர்களுக்கு மிரட்டும் தொனியில் உத்தரவிட்டுள்ளது அந்த மாஃபியா கும்பல். மேலும் மிளிரும் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டாம் என டிரைவர்களிடம்  கூறியுள்ளனர் அவர்கள். 

image


Advertisement

ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், விளக்கின் ஒளியும் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருப்பதால் அதை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு போட்டுள்ளனர். குறிப்பாக போதை வஸ்துகளை கைமாற்றும் போது ஆம்புலன்ஸின் ஒலி மற்றும் ஒளியை பார்த்து போலீஸ் என குழம்பி விடுவதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. தங்களது வாடிக்கையாளர்கள் அஞ்சி நடுங்குவதால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாம் மாஃபியா கும்பல்.

அதுமட்டுமின்றி சைரனுடன் சென்ற ஆம்புலன்ஸை மடக்கி இனி சைரன் பயன்படுத்தினால் சுடப்படுவீர்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனனர். இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close