சீனாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக ஒருவரின் சருமம் வழக்கத்திற்கு மாறாக மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வசிக்கும் 60 வயதான நபர் ஒருவரின் உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோயாளியின் உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்பதும் அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேறவில்லை என்பதும் தெரியவந்தது.
பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. அதன்பின் மருத்துவர்கள் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்த இரண்டு கட்டிகளையும் அகற்றினர். அதீதமாக புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாகவே இந்த கட்டி உருவாக காரணமாக இருந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆகவே அந்நபரை புகைப் பிடிப்பதை முற்றிலும் நிறுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மஞ்சள் நிறமாக மாறிய அந்த நோயாளியின் உடலில் இருந்த இரண்டு கட்டிகளை அகற்றிய பின் அவர் சாதாரண நிறத்திற்கு மாறிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!