[X] Close >

மார்ச் 26-ல் தியேட்டரில் வெளியாகிறது ‘டாக்டர்‘

Doctor-Film-Release-on-theatres-from-March-26-Kollywood-actor-Sivakarthikeyan-Tweets

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா அருள் மோகன் இதில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். யோகிபாபு, வினய் மாதிரியான நடிகர்களும் நடித்துள்ளனர். அண்மையில் டாக்டர் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்ததாக ட்வீட் செய்திருந்தார் சிவகார்த்திகேயன். 


Advertisement

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று டாக்டர் படம் தியேட்டரில் வெளியாக உள்ளதாக சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். 

இந்த படத்தை இயக்கிய நெல்சன் இப்போது நடிகர் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close