இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இன்றைய டிஜிட்டல் உலகில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்து வருகிறது. விண்டோ ஷாப்பிங், மொபைல் ஷாப்பிங் என அமேசானுக்கு நிகர் அமேசான்தான். கடந்த 1994 வாக்கில் அதை நிறுவியவர் ஜெப் பெஸாஸ். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர். இப்போது உலகின் நம்பர் 2 பணக்காரர் பெஸாஸ்தான். 27 வருடங்களுக்கு முன்னர் அவரது பெற்றோரிடம் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்று தான் பெஸாஸ் அமேசானை நிறுவினார்.
அப்போதிலிருந்தே அமேசானின் தலைமை செயல் அதிகாரியாகவும் அவரே செயல்பட்டு வந்தார். இந்த சூழலில்தான் சி.இ.ஓ பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக பெஸாஸ் அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் சார்பாக புதிய புராடக்களை அறிமுகம் செய்யும் பணியில் கவனம் செலுத்த உள்ளதாக பெஸாஸ் அறிவித்துள்ளார். வரும் ஜூலை - செப்டம்பர் காலாண்டின்போது பெஸாஸ் அந்த பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உள்ளார். அதே நேரத்தில் பெஸாஸ் அமேசானின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
பெஸாஸுக்கு பிறகு அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இணைய சேவை பிரிவின் சி.இ.ஓ-வாக உள்ள ஆண்டி Jassy பொறுப்பேற்க உள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?