விவசாயிகள் போராட்டத்திற்கு உலக புகழ் பாப் பாடகி ரிஹான்னா ஆதரவு தெரிவித்திருப்பது டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பில் நடந்த வன்முறைக்கு பிறகு போராட்டம் நடந்துவரும் பகுதியில் இணையவசதி துண்டிக்கப்பட்டு மீண்டும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி - அரியானா எல்லையான சிங்குவிலும் போராட்டம் வெடித்ததை அடுத்து அங்கும் இணையம் துண்டிக்கப்பட்டது.
இதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல பாப் பாடகி ரிஹான்னா ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ‘’நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ள ரிஹான்னாவின் ட்வீட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து பதில் ட்வீட் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் ரிஹான்னாவிற்கு பதில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ’’ஒருவரும் அதைவிட்டு பேசாததற்கு காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க திட்டமிடும் தீவிரவாதிகள். எனவே அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும்.
No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA...
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a
அமைதியாக இரு முட்டாளே! உங்களைப்போல நாட்டை விற்பவர்கள் நாங்கள் அல்ல’’ என்று பதிவிட்டுள்ளார். கங்கனாவிற்கு இந்த ட்விட்டர் பதிவிற்கும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி