தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தற்போது, ‘மாநாடு’ ‘பத்து தல’ படங்களில் நடித்துவரும் சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில், ”தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சி நடத்தலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், சங்க உறுப்பினர் சிலம்பரசன் தானாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக்கொடுக்கிறேன் என்றிருக்கிறார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படத்தின் மூலம் வரும் நிதியைக்கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட செயல்திட்டங்கள் நிறைவேற்றப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இப்படத்தினை, தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் தயாரிக்க, ‘வானம்’ படத்தின் வசனகர்த்தா ஞானகிரி இயக்குகிறார். படம் இந்த ஆண்டே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!