[X] Close >

“எல்லோரையும் போல் நானும் ’ஜகமே தந்திரம்’ தியேட்டரில் வரும் என நம்புகிறேன்” - தனுஷ் ட்வீட்!

Jagame-Thandhiram

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ தியேட்டரிலா? ஓடிடியிலா? என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தியேட்டரில் வெளியாகும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர், மனம் மாறி, படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
தமிழக அரசும் அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரத்தை ஒடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த சூழ்நிலையில் இதில் திடீர் திருப்புமுனையாக நடிகர் தனுஷே இத்திரைப்படத்தை வாங்கி அவரது வுண்டர் பார் மூலம் தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.


Advertisement

image
ஜகமே தந்திரம் படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுகள் பல தரப்பில் அடிபட்டு வந்த நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் இதுதொடர்பாக ஒரு பதிவிட்டுள்ளார். தனுஷ் தனது பதிவில் “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், எனது ரசிகர்கள் போலவே, ;’ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த ட்விட்டர் பதிவின் இறுதியில் ‘Fingers crossed’  என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை என்பதை அது குறிக்கிறது.

மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் சமீபத்தில் வெளியான சிபிராஜ் நடித்த கபடதாறி படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், அடுத்ததாக வெளியாக உள்ள படங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கையில்தான் தன்னுடைய படத்தையும் எப்படியாவது  திரையரங்கில் வெளியிட்டுள்ளால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் நினைப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close