நாம் அஜித்தை மதிக்கிறோம் என்றால் அவரது பிரைவசியையும் மதிக்க வேண்டும் என பைக் ரைடர் தினேஷ் தெரிவித்துள்ளார்
வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள அஜித், இன்னும் சில தினங்களில் சென்னை திரும்ப உள்ளார் எனத் தகவல் வெளியானது.
அஜித்தின் பைக் ரைடு குறித்து அவருடன் பைக் பயணத்தில் ஈடுபட்ட பைக் ரைடரான தினேஷ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அஜித்துடன் சென்ற பயணத்தை யூடியூப்பில் பதிவேற்றும்படி ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ரைடர் தினேஷ், ''நிச்சயம் முடியாது. எனக்கு அஜித்சார் பற்றி தெரியும். அவர் பிரைவசியை விரும்புபவர்.
நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது பிரைவசியையும் மதிக்க வேண்டும். நான் ஹெல்மெட்டில் பொருத்தும் கேமராவைக் கூட பொருத்தவில்லை. என்னுடைய செல்போனைக் கூட பயன்படுத்தவில்லை. சோஷியல் மீடியாக்களில் பரவும் புகைப்படமும் அவரின் அனுமதி பெற்று எடுத்ததுதான். அவர் ஒரே முறையில் 10ஆயிரம் கிமீ பயணம் செய்தார். அவரும் அவரது நண்பர்களும் 10ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ பயணம் செய்துள்ளனர். அவர் ஒரு வெறித்தனமாக பைக் ரைடர்'' என தெரிவித்தார்
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!