நான்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன. ‘புத்தம் புதுகாலை’, ‘பாவகதைகள்’ ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ வெளியாகவுள்ள. இதனையொட்டி, இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில், அமலாபால், விஜய் சேதுபதி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள், ரசிகர்கள்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?