மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 'அக்ரி செஸ்' அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. செஸ் என்பது கூடுதல் வரியாகும். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த கூடுதல் வரியால் நுகர்வோர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி விகிதங்கள் நிதி நிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
அடிப்படை உற்பத்தி வரி மற்றும் கூடுதல் சிறப்பு உற்பத்தி வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த மாற்றம் நாளை முதல் (பிப்ரவரி 2) அமலுக்கு வருகிறது. இந்த அக்ரி வரி தங்கம் (2.5%), வெள்ளி (35%) ஆப்பிள் (5%), ஆல்ஹகால் பானங்களுக்கு 100 சதவீதமும் விதிக்கப்படுகிறது.
ஆனால், செய்தியாளர்களிடம் உரையாடிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரிகளில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் விலைகளில் கூடுதலாக இந்த செஸ் சேர்க்கப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார். அவரது பார்வையில் பெட்ரோல் - டீசல் விலை உயரும்; அது நிச்சயம் நுகர்வோரை பாதிக்கும் என்பதாகவே இருக்கிறது.
- வா.கா
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?