பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்கள்.
ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி, கைதி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு, இன்று டீசரை வெளியிட்டிருக்கிறது.
”மகாபாரதத்துல கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும் கெளரவர்கள் மாறவில்லை. நீ ஒரு வாய்ப்புத்தானே கேக்குற தர்றேன். மகாபாரதத்துல கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நின்றிருந்தார். அதே கிருஷ்ணன் கெளரவர்கள் பக்கம் நின்றிருந்தா? மகாபாரதத்தை ஒருதடவை போர் இல்லாம படிச்சிப் பாருங்க சார்” என்று கார்த்தி பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது. இது மிகப்பெரிய ஆக்ஷன் வகை படமாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!